Nov 14, 2025
Thisaigal NewsYouTube
சபா தீர்ப்பு தொடர்பில் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்து மேல்முறையீடு
சிறப்பு செய்திகள்

சபா தீர்ப்பு தொடர்பில் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்து மேல்முறையீடு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

சபா மாநிலத்தின் வருவாயிலிருந்து 40 விழுக்காட்டுத் தொகையை அந்த மாநிலத்திற்கே திருப்பித் தரப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு எதிராக கோத்தா கினபாலு உயர் நீதின்றம் அளித்த தீர்ப்பின் சில அம்சங்களை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீடு நேற்று நவம்பர் 13 ஆம் தேதி புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசாங்கத்திற்கும், சபா மாநில அரசாங்கத்திற்கும் இடையில் இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக மறு ஆய்வுக்கான ஆதாரங்கள் இல்லாதது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு சமர்ப்பித்துள்ளது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், 40 விழுக்காடு வருவாயைச் சபாவிற்கு வழங்குவது குறித்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யவில்லை என்றார். ஆனால், 1974 ஆம் ஆண்டிலிருந்து சபாவிற்கு அந்த தொகையை வழங்குவதில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் அம்சத்தை மட்டுமே எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று விளக்கம் அளித்து இருந்தார்.

Related News