Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இருளில் ஒளி ஏற்றும் தீபாவளி: சிறைவாசிகளுக்கு முறுக்கு!
சிறப்பு செய்திகள்

இருளில் ஒளி ஏற்றும் தீபாவளி: சிறைவாசிகளுக்கு முறுக்கு!

Share:

பட்டர்வெர்த், அக்டோபர்.05-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பினாங்கு சிறைகளில் உள்ளவர்களுக்கு முறுக்கு உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களை வழங்கும் அற்புதமான முயற்சி நடைபெறுகிறது.

இந்த ஆழமான மாந்தநேயப் பணியின் தயாரிப்புகளை நேரில் பார்வையிட, பட்டர்வெர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் லிங்கேஸ்வரன் சார்மார் உடன் தாம் சென்றதாக, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையமும் பட்டர்வெர்த் ஓம் சக்தி ஆன்மீக, தொண்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டு நிகழ்வின் மூலம், பினாங்கு தடுப்புக் காவல் சிறையிலும், செபராங் பிறை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்குப் பலகாரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த உன்னத முயற்சி, கைதிகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருவதுடன், சமூக அக்கறை, மனிதநேயம் மற்றும் ஒற்றுமை போன்ற விழுமியங்களைப் பிரதிபலிக்கிறது என்றார். மேலும், இந்த நற்செயலுக்காக ஏற்பாட்டாளர்களுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related News