Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா
ஆன்மிகம்

ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.13-

சிலாங்கூர், ஷா ஆலாம் செக்‌ஷன் U 5 இல் வீற்றிருக்கும் ஶ்ரீ சிவசக்தி ஆரியம்மன் திருக்கோயிலின் மாபெரும் குடமுழக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த பக்தித் திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் மலேசிய இந்துக் கோயில்கள், இந்து அமைப்புகள் பேரவை மஹிமாவின் தலைவர் டத்தோ சிவக்குமார், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் துவான் முகமட் இஸுவான் பின் அஹ்மாட் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும் குடமுழக்கு விழா காலை 5.00 மணிக்குத் தொடங்கியது. காலை 8.15 மணியளவில் சுந்தர விமானத்திற்கும், பரிவார விமானங்களுக்கும் திருக்குடமுழக்கு நடைபெற்றது. ரதனைத் தொடர்ந்து மூலவரான சிவ சக்தி அம்மனுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நன்னீராட்டு நடைபெற்றது.

வருகை புரிந்த பக்தர்கள் யாவரும் ஶ்ரீ சிவசக்தி அம்மனின் அருளும் ஆசியும் பெற்றதோடு நண்பகலில் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர். இந்த திருவிழா சிறப்பாக நடைபெற ஆதரவாக இருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இத்திருக்கோயிலின் தலைவர் கோபால் ஆறுமுகமும் செயலாளர் அருண் குமாரும் தங்களின் செயலவை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி