கோலாலம்பூர், நவம்பர்.21-
வரும் நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி கோலாலம்பூர் கேஎல் எகோ சிட்டியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் மண்டபத்தில் "பதிகமே பரிகாரம்" என்ற தலைப்பில் என்ற சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெறவிருக்கிறது.

மலேசிய சிவனடியார் திருச்சபை மற்றும் மலேசிய நால்வர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்விற்கு தமிழகத்தைச் சேர்ந்த கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவரும், சைவ சித்தாந்த ஞானாசிரியருமான சிவத்திரு. பவானி தியாகராசன் சிறப்பு வருகை புரியவிருக்கிறார்.
இந்நிகழ்வு மலேசிய வாழ் அடியார்களுக்காக முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு அடிப்படையாகத் திகழும் இறை நம்பிக்கை வழியாக மக்கள் நல்லொழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு இந்த சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல் விபரங்களுக்கு:
+6012 3073565 /
+6012 2347495








