Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

பக்தர்களுக்கு காட்சி அளித்த வண்ணம், ஸ்ரீ தண்டாயுதபாணிஆலயத்தை நோக்கி புறப்பட்டார் முருகப்பெருமான்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்.10

நீடித்த வரலாற்றையும், பாரம்பரியத்தையும் ஒருங்கே கொண்டு, பினாங்கிற்கு சிறப்பு சேர்த்து வரும் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் உற்வச பெருகடவுளான, மக்களின் அருள்போற்றும், தைப்பூச உற்சவ மூர்த்தி ஸ்ரீ முருகப்பெருமானின வெள்ளி இரதம், பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டிலிருந்து பினாங்கு, தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலை நோக்கி காலை 7 மணிக்கு புறப்பட்டது.

முன்னதாக, முருகப்பெருமானுக்கு அபிசேகம், ஆராதனை செய்யப்பட்டு, பக்தர்கள் பால்குடம், காவடிகளை ஏந்திய வண்ணம், வெள்ளளி ரதம், தண்ணீர் மலையை நோக்கி புறப்பட்டது.

வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் காணிக்கை செலுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து, அந்த அருளாந்த முருகப்பெருமானை ஆனந்ததில் குளிர வைத்த காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

நாட்டுக்கேட்டை நகரத்தார் கோயில் நிர்வாகத்தினர் , வெள்ளி இரத ஊர்வலகத்திற்கு 17 ஜோடி என 34 காளைகளை பயன்படுத்துகின்றனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் குயின் ஸ்திரீட்டில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து தங்க ரதம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மேளதாள, நாதஸ்வரம் முழுங்க வெள்ளி இரதத்தின் புறப்பாடு நடைபெற்றது.

பக்தர்களின் அர்ச்சனைகளை ஏற்று, முருகன் பெருமான், தைப்பூச உற்வசத்தை தொடக்கி வைத்து, பக்தர்களுக்கு அருள்காட்சி தரும் வண்ணம், வெள்ளி இரதம் இன்றரவு தண்ணீர்மலை, பாலதெண்டாயுதபாணி கோவிலை சென்றடைவார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி