Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

கெசுமாவின் இளைப்பாறும் கூடாரங்கள், மிகப்பெரிய வெற்றியைத் தந்தன

Share:

கோலாலம்பூர், பிப்.13-

தைப்பூசத்தையொட்டி Kesuma எனப்படும் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இளைப்பாறும் கூடாரங்கள், ஆக்ககரமான பலன்களைத் தந்துள்ளன.

குறிப்பாக, பத்துமலையில் ஏற்படுத்தப்பட்ட கெசுமாவின் கூடாங்கள், பக்தர்களுக்கு நல்ல விளைவுகளைத்
தந்துள்ளன. மனித வள அமைச்சர் Steven Sim-மினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பில் பக்தர்கள், குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், கடமையில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்காக இந்த இளைப்பாறும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.

ஒரு நேரத்தில் 500 பேர் அமரக்கூடிய இந்த கூடாரங்கள் தைப்பூசத் தினமான பிப்ரவரி 11 ஆம் தேதி காலை முதல் ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர் இந்த இளைப்பாறும் கூடாரங்களில் ஓய்வெடுத்துச் சென்றுள்ளனர்.

இளைப்பாறும் அதேவேளையில் கெசுமாவின் சொக்சோ, உடல் பரிசோதனை உட்பட பல்வேறு சேவைகளும் பொது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டன.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி