Dec 1, 2025
Thisaigal NewsYouTube
பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம்
ஆன்மிகம்

பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம்

Share:

பத்துகேவ்ஸ், ஏப்ரல்.29-

வரும் மே முதல் தேதி வியாழக்கிழமை, பொது விடுமுறை தினத்தன்று பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஆதரவுடன் டி.எஸ்.கே குழுமம் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமா ஆகியவை இணைந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 8.00 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் விநாயகர் வழிபாடு நடைபெறும். தொடர்ந்து வேல்மாறல் ஆன்மீக சொற்பொழிவு, காவடி சிந்து குழுவினரின் காவடியாட்டம் இடம் பெறும். காலை 8.30 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறும்.

தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் ஆதவுடன் டி.எஸ்.கே குழுமத் தலைவரும், மஹிமாவின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் தலைமையில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம், அதிகமான முருகப் பக்தர்களில் இல்லங்களில் அனுதினமும் ஓதக்கூடிய மகா மந்திரமாகும்.

வீரம், நம்பிக்கை, மன வலிமையைத் தந்து மக்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு பாராயணத்திற்குச் சிறப்பு சேர்க்குமாறு டி.எஸ்.கே குழுமம் மற்றும் மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி