ஈப்போ, செப்டம்பர்.01-
நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாகத் திகழ கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அரசாங்கம், சமயத்திற்கும் முன்னுரிமை வழங்கி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள சமய சார்புடைய பல அமைப்புகள், மாணவர்களுக்குச் சமயக் கல்வியைப் புகட்டி வருகிறது.

அந்த வகையில் மலேசிய இந்து தர்ம மாமன்றம் பல மாநிலங்களில் சமய போதனைகளை வழங்கி வருகிறது.

இளையோர் சமய வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொள்ள பேரா, சிம்மோர் கந்தன் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் பேரா மாநில இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில் திருப்புகழ் பாராயணப் பெருவிழா, சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் திருப்புகழின் மேன்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

பாராயணம் என்பது அருணகிரிநாதர் அருளிய பலத்தைத் தர வல்லதாகும். பாடலில் முதல் வரியிலேயே அதன் தனித்துவத்தை உணர முடியும். அந்தப் பாடல் மாணவர்களுக்கு நல்ல பயிற்சியைக் கொடுக்க வல்லது என்று புகழாரம் சூட்டப்பட்டது.