மலாக்கா, அக்டோபர்.28-
மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், கம்போங் கெமுஸ், பழைய நானிங் திருக்கோவிலான ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத விழாவையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தின் திருமண மண்டபத்தில் பக்த பெருமக்கள் புடை சூழ இரவு மணி 7.28 க்கு திருக்கல்யாண உற்சவம் ஆரம்பமானது.

நாதஸ்வர மேளதாளம் முழங்க முருகப் பெருமானுக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனை மற்றும் தீபாரதனையுடன் உற்சவம் தொடங்கியது.
இந்நிகழ்விற்கு புடவை, வேஷ்டி துண்டு,வெற்றிலைப் பாக்கி, தேங்காய், பழங்கள், பலகாரங்கள், பூக்கள் மற்றும் பூஜை பொருட்களுடன் அடியார் பெருமக்கள் தம்பதியர் சகிதமாக சீர்தட்டுகள் கொண்டு வந்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் அருள் காட்சித் தந்த முருகப் பெருமானுக்கு, ஆலயத்தின் பிரதம குருக்கள், ஆஞ்சநேய உபாசகர் ஈசான சிவம் சிவஸ்ரீ கு. நவதாஸ சிவாச்சாரியார் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.








