பக்தி நெறியை வளர்க்கும் நோக்கில், மலேசிய சிவனடியார் திருச்சபை மற்றும் மலேசிய நால்வர் மன்றத்தின் கூட்டு ஏற்பாட்டில் கெடா மாநிலத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு அன்னை கருமாரியம்மன் ஆலயம் மற்றும் கெடா நால்வர் மன்றத்தின் பேராதரவோடு, "திருவாசகம் எனும் மெய்ப்பொருள்" என்ற தலைப்பில் இந்த விழா நடைபெறவிருக்கிறது.
வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி, சனிக்கிழமை, காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கெடா, பாயா பெசார் லூனாஸில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் இந்த ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு, பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர், ஞானாசிரியர் சிவத்திரு பவானி அ. தியாகராசன் அவர்கள் சிறப்பு வருகை தந்து, திருவாசகத்தின் மெய்ப்பொருளை பக்தர்களுக்கு விளக்கி ஆன்மீக உரையாற்ற உள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்படவுள்ளது. இந்த ஆன்மீக விழாவில் பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர். கூடுதல் விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு திரையில் தெரியும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
• 013-4534775 ( சிவதிருமதி பரிமளாதேவி )
• 012-3073565 ( சிவதிருமதி மணி )
• 012-5571627 ( சிவதிருமதி தியாகேஸ்வரி )








