Nov 22, 2026
Thisaigal NewsYouTube

சிரம்பான் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் திருக்கார்த்திகை திருவண்ணாமலை தீபத்திருவிழா; லிங்க வடிவில் 1,800 விளக்குகள் ஏற்றும் வைபவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிரம்பான் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில் திருக்கார்த்திகை திருவண்ணாமலை தீபத்திருவிழா; லிங்க வடிவில் 1,800 விளக்குகள் ஏற்றும் வைபவம்

சிரம்பான், செனாவாங், துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானத்தில், மங்களகரமான திருக்கார்த்திகை திருவண்ணாமலை தீபத்திருவிழா எதிர்வரும் நவம்பர் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நன்னாளில், ஆலயத்தில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி திருமுன், லிங்க வடிவில் 1,800 தீப விளக்குகள் ஏற்றப்படவுள்ளன. அன்றைய தினம் மதியம் 4.30 மணிக்கு மஹா அபிஷேகத்துடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நித்ய பூஜையும், 7.15 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும்.

இரவு 8.01 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் சுவாமி உள்வீதி வலம் வரும் வைபவம் நடைபெறும். பின்னர் இரவு 8.31 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்படும். விழாவின் முக்கிய நிகழ்வாக, இரவு 9.01 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி முன் 1,800 தீப விளக்குகள் லிங்க வடிவத்தில் ஏற்றப்படவுள்ளன. இறுதியாக இரவு 9.45 மணிக்கு பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவு பெறும்.

இந்தத் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏற்றப்படவுள்ள 1,800 தீப விளக்குகளை வாங்கித் தர விரும்பும் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் ஆலய நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கும், விளக்குகள் முன்பதிவு செய்வதற்கும் 017-322 5400 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இத்தெய்வீகப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு தேவஸ்தான நிர்வாகத்தினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in ஆன்மிகம் →