Oct 31, 2026
Thisaigal NewsYouTube

ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது

நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்துக்கு எதிராக முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் தொடுத்த நீதிமன்ற மறுஆய்வு வழக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மீட்டுக் கொள்ளப்பட்டது.

2024ஆம் ஆண்டு கோயில் நிர்வாகத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த சங்கங்களின் பதிவு அலுவலகமான ஆர்ஓஎஸ் (ROS), 2025 ஏப்ரல் 11ஆம் தேதி அந்தப் புகாரை நிராகரித்தது. இதனை எதிர்த்து நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

முன்னாள் உறுப்பினர்களான விஜயன் நாயகம், சுப்ரமணியம் ராமையா, சுரேஷ் குமார் பெருமாள் என்ற ஐயாசாமி, செல்வராஜா எஸ். முனியாண்டி ஆகியோரின் நீதிமன்ற மறுஆய்வு விண்ணப்பத்தை, மீண்டும் தாக்கல் செய்ய வாதிகள் ஆவர்.

கோயிலின் 2024 டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டம், நிர்வாகக் குழுத் தேர்தல் மற்றும் உறுப்பினர் சீரமைப்பு நடவடிக்கைகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதும் அந்த நால்வரின் கோரிக்கைகளில் அடங்கும்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டத்தோ அஸிஸான் பின் முஹமட் அர்ஷாட் முன்னிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் அதே கோரிக்கைகளை முன்வைத்து அந்த நால்வரும் மீண்டும் வழக்குத் தொடர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், வாதிகள் நால்வர் சார்பில் கார்த்திக் ஷான் வழக்கறிஞர் நிறுவனத்தினர் ஆஜரான வேளையில் ரந்தாவ் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் சார்பில் ஹசானுடின் அண்ட் ஹனிஃப் வழக்கறிஞர் நிறுவனத்தினர் ஆஜராகினர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in ஆன்மிகம் →