Oct 5, 2026
Thisaigal NewsYouTube

அபிராமி அந்தாதி பாராயணம் ஆன்மிகப் பண்பாட்டை வளர்க்கும்: இளைய தலைமுறையினரிடம் சமய, பண்பாட்டு விழுமியங்களை கொண்டு செல்ல வேண்டும் – டத்தோ சிவநேசன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அபிராமி அந்தாதி பாராயணம் ஆன்மிகப் பண்பாட்டை வளர்க்கும்: இளைய தலைமுறையினரிடம் சமய, பண்பாட்டு விழுமியங்களை கொண்டு செல்ல வேண்டும் – டத்தோ சிவநேசன்

அபிராமி அந்தாதி போன்ற பக்தி இலக்கியங்கள் தமிழர்களின் ஆன்மிகத்தையும் பண்பாட்டையும் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் முக்கியப் பாலமாக விளங்குகின்றன என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அபிராமி அந்தாதி பாராயணப் பெருவிழாவை தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், இளைய தலைமுறையினரும் சிறார்களும் இதுபோன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றார்.

மலேசிய இந்துத்தர்ம மாமன்றம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு பேரா மாநில ஆதரவு நல்கியிருப்பதுடன் , 32 ஆயிரம் ரிங்கிட் மானியமும் வழங்கப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற பாராயணத்தில் சுமார் 300 மாணவர்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

இளைய தலைமுறையினரிடம் சயம, பண்பாட்டு சிறப்புகளை கொண்டு செல்லும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இது போன்ற சமய நிகழ்வுகள் பேரா மாநிலத்தில் அதிகமாக நடைபெற வேண்டும் என்று டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.

பேராக் மாநில இந்து தர்ம மாமன்றத் தலைவர் கிருஷ்ணன் சுப்பிரமணியம் கூறுகையில், இந்து சமயத்தின் செழுமையையும் அதன் சிறப்புகளையும் இந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மாமன்றத்தின் தலையாய நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை முன்னெடுக்கும் வகையிலேயே இது போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது போன்ற சமய நிகழ்வுகள் தம்மைப் போன்றவர்கள் , சமய அறிவை பெருக்கிக் கொள்ள பேருதவியாக இருக்கும் என்று சுங்கை சிப்புட்டை சேர்ந்த சுமித்ரா பத்மநாபன் தெரிவித்தார்.

அபிராமி அந்தாதி பாராயணம், தங்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியதாக பத்து காஜாவை சேர்ந்த தினேஸ் திருச்செல்வம் தெவித்தார்.

நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஆதரவு வழங்கிய டத்தோ சிவநேசன் உள்ளிட்ட அனைவருக்கும் கிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி, மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in ஆன்மிகம் →