Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அன்னையின் அருளை வேண்டி நவராத்திரி வழிபாடு கோலாகலத் தொடக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்னையின் அருளை வேண்டி நவராத்திரி வழிபாடு கோலாகலத் தொடக்கம்

அன்னை பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழா இன்று, அக்டோபர் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தீமையை வென்று நன்மை நிலைபெறுவதையும், அறிவு, செல்வம், வீரத்தின் சிறப்புகளையும் உணர்த்தும் இவ்விழாவில், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வழிபட்டு பக்தர்கள் அருள் பெறுகின்றனர்.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்கள், வீடுகள் மற்றும் பள்ளிகளில் சிறப்புப் பூஜைகள் தொடங்கியுள்ளன. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மீக விழா, பக்தியையும் பண்பாட்டையும் ஒன்றிணைப்பதுடன், இளைய தலைமுறையினரிடையே பாரம்பரிய உணர்வையும் வளர்க்கிறது.

நவராத்திரி பூஜைக்கு கோலாலம்பூரில் பிரசித்திப் பெற்ற பள்ளியான செந்தூல் தம்புசாமிப்பிள்ளை தமிழ்ப்பள்ளியில், நவராத்திரி விழா இன்று சிறப்பாகத் தொடங்கியது. ஆசிரியர்கள் முன்னிலையில் குருக்கள் மந்திரங்கள் ஓதி, சிறப்புப் பூஜைகளை நடத்தினர். ஆன்மீகச் சூழலில் நடைபெற்ற இந்த வழிபாடு, பள்ளி மாணவர்களிடையே சமயப் பண்பாட்டையும் பக்தி உணர்வையும் வளர்க்கும் வகையில் அமைந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in ஆன்மிகம் →