Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் முதல் முறையாக திருவாசக மாநாடு
ஆன்மிகம்

மலேசியாவில் முதல் முறையாக திருவாசக மாநாடு

Share:

திருவாசகத்தின் பெருமையையும் மாணிக்கவாசகரின் அருள்நெறியையும் மலேசிய மண்ணில் பறைசாற்றும் வகையில், மலேசியாவில் முதல்முறையாக மாபெரும் திருவாசக மாநாடு நடைபெறவுள்ளது.

மலேசிய நால்வர் மன்றமும், மலேசிய சிவனடியார் திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பத்துகேவ்ஸ் சின்ஹா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் ஆன்மிக நிகழ்வில் சிவனடியார்கள், திருவாசக அன்பர்கள் மற்றும் இறையன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, ஏற்பாட்டுக் குழு சார்பில் மலேசிய நால்வர் மன்றத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் கந்தசாமி கேட்டுக் கொண்டார்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு திருநீற்றுப் பை, மாணிக்கவாசகர் வரலாற்று நூல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வழங்கப்படவுள்ளதாக, ஏற்பாட்டுக் குழு சார்பில் மலேசிய சிவனடியார் திருச்சபையின் தலைவர் மாணிக்கம்மாள் தெரிவித்தார்.

திருவாசகத்தின் அருமை, பெருமைகளை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில், இறையன்பர்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related News