ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.10-
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் புதிய தலைவராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், துணைத் தலைவராகச் செனட்டர் ஏ.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டார். புதிய தலைவரின் தலைமையில், பினாங்கில் உள்ள இந்து சமூகத்திற்குச் சேவை செய்யவும், அவர்களை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என அவ்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய நியமனங்கள், இந்து சமூகத்தின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.