Jan 17, 2026
Thisaigal NewsYouTube
குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு
ஆன்மிகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

Share:

குளுவாங், நவம்பர்.29-

ஜோகூர், குளுவாங்கில் நடைபெற்று வரும் மாபெரும் சமய மாநாட்டில் மலேசிய மண்ணில் இந்து சமயத்தின் வளர்ச்சிக்கும், சமய நெறி மேன்மைக்கும், வழிபாட்டு முறைக்கும், சமய தெளிவுரைக்கும் தங்களின் வாழ்நாள் தவமாக, சேவையாற்றி வரும் மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

புக்கிட் ரோத்தான் சக்தி திருக்கோயிலின் ஸ்தாபகரும், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் முதன்மை ஆலோசகருமான சிவஸ்ரீ அ.ப. முத்துகுமார சிவாச்சாரியார், மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமட ஸ்தாபகர் மகேந்திர சுவாமிகள் மற்றும் சுபாங் ஜெயா, பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்தின் பொறுப்பாளர் ஆர்திமூலம் ஆகியோரே மாநாட்டில் கெளரவிக்கப்பட்ட சமய ஆன்றோர்களாவர்.

குளுவாங், தாமான் பெர்சத்து, ஜாலான் பத்து பஹாட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கணேசன் சுப்பையா முன்னிலையில் இரு தினங்களுக்கு நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டுக்கான மாபெரும் சமய மாநாட்டின் தொடக்க விழாவில் மூன்று சமய ஆன்றோர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வில் சிவஸ்ரீ அ.ப. முத்துகுமார சிவாச்சாரியாருக்கு வாழ்நாள் ஆன்மீக சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சமய வளர்ச்சிக்கும், ஆலய மேம்பாட்டிற்கும், சமயம் சார்ந்த சொற்பொழிவுகளின் வாயிலாக சமய அரும்பணியை ஆற்றி வரும் மகேந்திர சுவாமிகள் அவர்களுக்கு அருளுரை செம்மல் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

இந்து சமய வளர்ச்சிக்கும், தேவாரம், திருமுறை அறியவும், பயிலவும், பயிற்றுவிக்கவும் அளப்பரிய சமயப் பணியாற்றி வரும் ஆர்திமூலம் அவர்களுக்கு அருளுடை அண்ணல் எனும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொ. சொ. மீ. சுந்தரம் முன்னிலையில் மூன்று சமய ஆன்றோர்களுக்கும் பொன்னாடை, மாலை அணிவித்து, பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் திரளாக கலந்த கொண்ட முதல் நாள் மாநாட்டில் இடம் பெற்ற ஆன்றோர்களின் சமய சொற்பொழிவுகள் மற்றும் சமய தெளிவுரைகள் இந்து சமயத்தின் மேன்மையை உயர்த்தும் வகையில் அமைந்தன.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு