Dec 1, 2025
Thisaigal NewsYouTube
வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 108 சுமங்கலிகளின் குத்து விளக்குப் பூஜை
ஆன்மிகம்

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 108 சுமங்கலிகளின் குத்து விளக்குப் பூஜை

Share:

கூலிம், ஆகஸ்ட்.08-

தமிழர்களின் சிறப்பான மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்புமிக்கதாகும். இவ்வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கூலிம் ஹய் தேக் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தில் ( சேரா ஆலயம்) 108 சுமங்கலி பெண்கள் குத்து விளக்குப் பூஜையில் கலந்துக் கொண்டுச் சிறப்பித்தனர்.

ஆலயத்தின் மகளிர் பிரிவின் தலைவி ஜோதிலட்சுமி அவரின் தலைமையில் ஆலய நிர்வாகத்தினர்களின் ஆதரவுடன் ஒவ்வொரு வருடமும் குத்து விளக்குப் பூஜை நடைபெற்று வருகின்றது. இப்பூஜையில் வருடந்தோறும் 108 சுமங்கலிகளுக்கு மேல் கலந்துக் கொள்வார்கள் என்று ஜோதிலட்சுமி கூறினார். வரலட்சுமி பூஜை எல்லா விதமான லட்சுமி கடாட்சங்களும் பெறுவதற்காகவே செய்யப்படும் பிரார்த்தனையாகும்.

கூலிம் ஹய் தேக் பாக்கிலுள்ள ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் (சேரா ஆலயம்) மண்டபத்தில் மாலை 7.00 மணி அளவில் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சுப்பிரமணியம் அவர்கள் சிறப்புப் பூஜைக்குப் பின் குத்து விளக்குப் பூஜை தொடங்கப்பட்டன.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி