Dec 1, 2025
Thisaigal NewsYouTube
லாபுவான் திருமுருகன் கோவிலுக்கு டான்ஸ்ரீ நடராஜா அதிகாரப்பூர்வ வருகை
ஆன்மிகம்

லாபுவான் திருமுருகன் கோவிலுக்கு டான்ஸ்ரீ நடராஜா அதிகாரப்பூர்வ வருகை

Share:

லாபுவான், ஜூன்.14-

லாபுவானின் வீற்றிருக்கும் திருமுருகன் கோவிலுக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார்.

மலேசிய இந்து கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் ஆலோசகருமான டான்ஸ்ரீ நடராஜா, லாபுவான் திருமுருகன் கோவிலின் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில் அக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இவ்வருகையின் போது கோவிலில் நடைபெற்று வரும் மேம்பாட்டிற்கு ஆதரவு நல்கும் வகையில் டான் ஸ்ரீ நடராஜா 10 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கினார்.

டான்ஸ்ரீ நடராஜாவுடன் இவ்வருகையில் பங்கு கொண்ட மஹிமாவின் தலைவரான டத்தோ என. சிவகுமார் கூறுகையில், தேவார வகுப்புகள், இந்து சமயக் கல்வி மற்றும் கோயில் நூலகத்தை நிறுவுதல் உள்ளிட்ட கோயிலின் அழகிய உள்கட்டமைப்பு மற்றும் சமூகத்திற்கு திருமுருகன் ஆலயம் ஆற்றி வரும் பங்களிப்பை, வெகுவாகப் பாராட்டினார்.

மலேசிய இந்து கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையில் இணைவதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், கோவில் நிர்வாகத்தினர் மஹிமாவின் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி