கோலாலம்பூர், அக்டோபர்.18-
2025 ஆம் ஆண்டுக்கான தர்மா மடானி திட்டத்திற்கான விண்ணப்பங்கள், இன்று அக்டோபர் 18 முதல் எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று மித்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கும் மித்ரா அழைப்பு விடுத்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள், முழுமையாகவும் விதிமுறைகளுக்கு ஏற்பவும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த தர்மா மடானி திட்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பார்க்குமாறு மித்ரா அறிவுறுத்தியுள்ளது.
மொத்தம் 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள 1,000 இந்து ஆலயங்கள் பயனடைய உள்ளன.