Sep 22, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை
ஆன்மிகம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

Share:

கோலாலம்பூர், மே.10-

கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 133 ஆம் ஆண்டு திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் இலக்கவியல் அமைச்சரும், ஜசெக தலைவருமான கோபிந்த் சிங் டியோ கலந்து சிறப்பித்தார்.

130 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியை கொண்ட இந்த ஆலய விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டு வரும் நிலையில் நாட்டில் உள்ள ஆலய விவகாரங்கள், நடப்பில் உள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப பின்பற்றப்படுவது உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்து இருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

இந்த வருடாந்திர திருவிழாவிற்கு அப்பாற்பட்ட நிலையில் ஆலயத்தில் நடைபெற்ற அன்னையர் தினவிழா கொண்டாட்டத்திலும் கோபிந்த் சிங் கலந்து கொண்டு அன்னையர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்ததுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

ஆலய நில விவகாரம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தை பிரிதொரு சமயத்தில் சந்தித்து பேசுவதாக அமைச்சர் கோபிந்த் சிங் உறுதிமொழி கொடுத்துள்ளார் என்று ஆலயத் தவைர் டாக்டர் பார்த்திபன் தெரிவித்தார்.

ஆலயத் திருவிழாவில் மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு சேர்ந்தனர். பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு இடையே சுவாமி வீதியுலா மிக விமரிசையாக நடைபெற்றது.

Related News