Jul 15, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி
ஆன்மிகம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

Share:

சிலாங்கூரில் மாநில அளவிலான முதல் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

மலேசிய சிவனடியார் திருச்சபை, சிலாங்கூர் நால்வர் மன்றம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வர் திருக்கோயில் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் பாட, இறைவன் கைப்பட எழுதப்பட்டதாக கருதப்படும் 658 பாடல்களை கொண்ட திருவாசகத்தை முழுமையாக ஒன்றுகூடி ஓதும் “ஞான பனுவல்” நடைபெற உள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் முதன்முறையாக மாநில அளவில் நடைபெறும் இந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி, பக்தர்களுக்கு ஒரு அரிய ஆன்மிக வாய்ப்பாக கருதப்படுகிறது.

இதனால் பொதுமக்கள், அடியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கலந்து கொண்டு இறைவனின் திருவருளையும் குருவருளையும் பெறுமாறு ஏற்பாட்டுக் குழு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

திருவாசகம் ஓதுதல், ஜோகூரில் நடைபெறுகிறது

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீமஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வந்து சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவப் பெருவிழா: பக்தி வெள்ளத்தில் மாடவீதிகளில் கோலாகலமாக வலம் வரும் சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

  சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: நாளை பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்