Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு
ஆன்மிகம்

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.03-

புக்கிட் கெமுனிங் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் இடம் மாற்றப்பட்டு விட்டதாக ஆலய நிர்வாகம் அறிவித்தது.

இன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வரும் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வ வழிப்பாட்டுச் சிலைகளும் முறையாக ஆகம விதிக்கு உட்பட்டு அனைத்தும் இடம் மாற்றம் செய்து விட்டதாகவும் உடைந்த நிலையில் இருக்கும் அச்சிலையானது கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு சிலை என்பதுடன் அச்சிலை அகற்ற முடியாத சூழ்நிலையில் அங்கே இறுக்கமானக் கம்பிகளைக் கொண்டு பிணைக்கப்பட்டிருந்ததால் அச்சிலையை மட்டும் ஆலய நிர்வாகம் அகற்றாமல் விட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆலய நிர்வாகமும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதனின் அறிவுறுத்தலின் பெயரில் புதிய இடத்திற்கு மாறிச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்கியது.

அதே வேளையில் இடம் மாறுவதற்கு முன்னதாக, அனைத்து சிலைகளையும் முறையாக இந்து ஆகம விதிபடி அகற்ற வேண்டும் என்று சட்டமன்ற மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனின் ஆலோசனையின் பெயரிலேயே அனைத்து சிலைகளையும் ஆலய நிர்வாகம் அகற்றியதாகவும், அதற்கு ஆதரமாக சில புகைப்படங்களையும் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் வழங்கினர்.

அதே வேளை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களையோ, செய்திகளையோ அல்லது தனிநபர் குற்றச்சாட்டுகளையோ முறையாக விசாரித்தப் பிறகு பகிரவோ அல்லது நம்பும்படியும் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி