கோலாலம்பூர், செப்டம்பர்.14-
கம்போங் பாரு செகிஞ்சான் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மகா மாபெரும் திருக்குட நன்னீராட்டு விழாவில் மஹிமா எனப்படும் மலேசிய இந்திக் கோயில்கள், இந்து அமைப்புகள் பேரவையின் தலைவரும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலருமான தலைவர் டத்தோ என். சிவகுமார், கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விழாவானது, கோயில் நிர்வாகத்திற்கும் பக்தர்களுக்கும் ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது என சிவக்குமார் குறிப்பிட்டார். மேலும், இவ்வாலயத்தின் நிர்வாகத்திற்கு மகிமா அமைப்பின் உறுப்பினர் சான்றிதழை அவர் வழங்சி சிறப்பித்தார்.

இந்த விழாவில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். இந்த விழா அனைவருக்கும் அமைதியையும், வளமையையும், நல்லிணக்கத்தையும் தரட்டும் என அவர் இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.