Jun 27, 2026
Thisaigal NewsYouTube
2026 தைப்பூசம்: ஷா ஆலாமிலிருந்து பத்துமலைக்கு இலவசப் பேருந்து சேவை! சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிரடி ஏற்பாடு
ஆன்மிகம்

2026 தைப்பூசம்: ஷா ஆலாமிலிருந்து பத்துமலைக்கு இலவசப் பேருந்து சேவை! சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிரடி ஏற்பாடு

Share:

ஷா ஆலாம், ஜனவரி.23-

2026-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பத்துமலைத் திருத்தலத்திற்குச் சென்று வர கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் இலவசப் பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த இலவசப் பேருந்து சேவை வரும் ஜனவரி 31, 2026 சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஷா ஆலாமின் மூன்று முக்கிய இடங்களிலிருந்து புறப்படவிருக்கிறது:

1. ஸ்ரீ மூடா கோயில் வளாகம்,

2. Pejabat MPP ZON 14,

3. ஆலாம் மேகா, கோயில் வளாகம் ஆகியவையே பேருந்து புறப்படும் மூன்று இடங்களாகும்.

இந்தப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பக்தர்கள், இடப் பற்றாக்குறையைத் தவிர்க்க முன்கூட்டியே பதிவு செய்வது அவசியமாகும். ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் பின்வரும் விவரங்களை +601112575460 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்:

• முழுப் பெயர்

• அடையாள அட்டை எண்

• கைப்பேசி எண்

• பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை

கோத்தா கெமுனிங் வட்டார மக்கள் எவ்வித சிரமமுமின்றி பக்திப் பரவசத்துடன் தைப்பூச விழாவில் பங்கேற்பதை உறுதிச் செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பக்தர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, நெரிசலின்றி பத்துமலை முருகப் பெருமானைத் தரிசித்து வரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related News

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

செந்தூல் மகா காளியம்மன் ஆலயத் திருப்பணி: நிதி திரட்ட தங்கக் காசு விற்பனைத் தொடக்கம்

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

மஸ்ஜிட் இந்தியா பத்ரகாளியம்மன் கோயில் 133-ஆம் ஆண்டு திருவிழா விமரிசை

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

பினாங்கு ஸ்ரீ அக்னி முனீஸ்வரர் ஆலயத்திற்கு 99 ஆண்டு நில உரிமை: டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தகவல்

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

திருவாசக முற்றோதல் ஞான வேள்வி – நெகிரி செம்பிலானில் மாநில அளவிலான ஆன்மிக விழா

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

கோலாலம்பூரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் விக்ரஹ பிரதிஷ்டை திருவிழா: ஏப்ரல் 18 முதல் 20 வரை உற்சாகக் கொண்டாட்டம்

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி

சிலாங்கூரில் நாளை மாநில அளவிலான திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி - 658 திருவாசகப் பாடல்கள் ஓதும் ஞான வேள்வி