Jan 22, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை
ஆன்மிகம்

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை

Share:

அலோர் ஸ்டார், ஜனவரி.22-

தைப்பூசத் திருவிழாவையொட்டி, கெடா மாநில அரசாங்கம், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் தலைமையில் நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.

கெடா மாநில நிர்வாகத்திற்கான துணைச் செயலாளர் டத்தோ டாக்டர் நாட்ஸ்மான் முஸ்தஃபா கையொப்பமிட்ட அந்த அதிகாரப்பூர்வ கடிதத்தின்படி, இந்த விடுமுறையானது விடுமுறைச் சட்டம் 1951, சட்டம் 369, பிரிவு 9(1)-இன் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகளின் தலைவர்கள், சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைவர்கள், அத்துடன் மாநிலத்தில் உள்ள ஊராட்சித் துறைத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதமானது, நேற்று சனூசியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டது.

Related News

ஈப்போ தைப்பூசம்: பக்தர்களுக்காக ஜாலான் துன் ரசாக் பாலம் தற்காலிகமாகத் திறப்பு - சட்டமன்ற உறுப்பினர் துளசி தகவல்

ஈப்போ தைப்பூசம்: பக்தர்களுக்காக ஜாலான் துன் ரசாக் பாலம் தற்காலிகமாகத் திறப்பு - சட்டமன்ற உறுப்பினர் துளசி தகவல்

பத்துமலை மின்படிக்கட்டு விவகாரம்: கோபிந்த் சிங் முன்னிலையில் சுமூகத் தீர்வு நோக்கி முக்கிய நகர்வு!

பத்துமலை மின்படிக்கட்டு விவகாரம்: கோபிந்த் சிங் முன்னிலையில் சுமூகத் தீர்வு நோக்கி முக்கிய நகர்வு!

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை