Jan 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து
ஆன்மிகம்

பினாங்கு தைப்பூச பாதுகாப்புப் பணியில் 1,280 போலீசார் குவிப்பு: அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்து

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.30-

பினாங்கு மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தைப்பூச விழாவை முன்னிட்டு, கிட்டத்தட்ட 1,280 போலீசார் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தொடர் குற்றத்தடுப்பு கண்காணிப்பிற்காக விரைவுப்படை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தீமோர் லாவுட் போலீஸ் தலைவர் அப்துல் ரோஸாக் முஹமட் தெரிவித்துள்ளார்.

வரும் சனிக்கிழமை காலை 6 மணியளவில் லெபோ குயினில் இருந்து தங்க இரதமும், 7 மணியளவில் லெபோ பினாங்கில் இருந்து வெள்ளி இரதமும் தண்ணீர் மலை நோக்கிச் செல்லும் என்பதால், இரண்டு நாட்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அப்துல் ரோஸாக் குறிப்பிட்டுள்ளார்.

நாளை சனிக்கிழமை தொடங்கி திங்கட்கிழமை வரை, கிட்டத்தட்ட 1 மில்லியன் பக்தர்கள் பினாங்கு தைப்பூச விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் போலீசார் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அப்துல் ரோஸாக் வலியுறுத்தியுள்ளார்.

Related News

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

நாளை பிரதமர் வருகை: பத்துமலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பணி

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்

பினாங்கு தைப்பூச வெள்ளி இரதம் முன்கூட்டியே புறப்பட கோரிக்கை

பினாங்கு தைப்பூச வெள்ளி இரதம் முன்கூட்டியே புறப்பட கோரிக்கை

பத்துமலையில் பொங்கியெழுந்த பக்திப் பெருக்கு: ‘குட்டி தைப்பூசத்தால்’ திக்குமுக்காடிய திருத்தலம்! எங்கும் அரோகரா முழக்கம்

பத்துமலையில் பொங்கியெழுந்த பக்திப் பெருக்கு: ‘குட்டி தைப்பூசத்தால்’ திக்குமுக்காடிய திருத்தலம்! எங்கும் அரோகரா முழக்கம்