Jan 28, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்
ஆன்மிகம்

சுங்கை பட்டாணி தைப்பூசத் திருவிழா: 80,000 பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு; 494 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

Share:

சுங்கை பட்டாணி, ஜனவரி.28-

கெடா, சுங்கை பட்டாணியில் வரும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை நான்கு நாட்களுக்குத் தைப்பூச விழா மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 494 காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளதாக மாநிலத் தலைமை காவல்துறை அதிகாரி கமிஷனர் டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்துடன், ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ மஹா முனீஸ்வரர் ஆலயங்களும் இணைந்து இந்த விழாவை முன்னெடுக்கின்றன.

சுங்கை பட்டாணி தைப்பூச விழாவில் சுமார் 50,000 முதல் 80,000 வரை பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர். பால்குடம், காவடி மற்றும் இரத ஊர்வலங்கள் நடைபெற இருப்பதால், ஜாலான் பசார், ஜாலான் செக்கேராட் ( Jalan Sekerat) மற்றும் சுங்கை பட்டாணி-கோல கட்டிக் ஆகிய சாலைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விதிமுறைகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ அட்ஸ்லி எச்சரித்துள்ளார். எனவே, இந்தப் போக்குவரத்து மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமரிடம் எதுவும் கேட்கப் போவதில்லை: தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறுகிறார்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்

பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா: ஆகம முறைப்படி காணிக்கை செலுத்த வேண்டும்

பினாங்கு தைப்பூச வெள்ளி இரதம் முன்கூட்டியே புறப்பட கோரிக்கை

பினாங்கு தைப்பூச வெள்ளி இரதம் முன்கூட்டியே புறப்பட கோரிக்கை

பத்துமலையில் பொங்கியெழுந்த பக்திப் பெருக்கு: ‘குட்டி தைப்பூசத்தால்’ திக்குமுக்காடிய திருத்தலம்! எங்கும் அரோகரா முழக்கம்

பத்துமலையில் பொங்கியெழுந்த பக்திப் பெருக்கு: ‘குட்டி தைப்பூசத்தால்’ திக்குமுக்காடிய திருத்தலம்! எங்கும் அரோகரா முழக்கம்

2026 தைப்பூசம்: ஷா ஆலாமிலிருந்து பத்துமலைக்கு இலவசப் பேருந்து சேவை! சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிரடி ஏற்பாடு

2026 தைப்பூசம்: ஷா ஆலாமிலிருந்து பத்துமலைக்கு இலவசப் பேருந்து சேவை! சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அதிரடி ஏற்பாடு

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை

தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் பிப்ரவரி 1-ம் தேதி பொது விடுமுறை