கோலாலம்பூர், ஜூலை.20-
இன்று மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மலேசிய இந்து சங்கத் தேர்தலில் நடப்புத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க.கணேசன் அணியில் போட்டியிட்டவர்களில் பெரும் பகுதியினர் வெற்றி பெற்றனர்.

மலேசிய இந்து சங்க நிர்வாகத்தில் முதல் பத்து மத்திய செயலவை உறுப்பினர்களில் முதல் இடத்தில் தங்க. கணேசன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 1,102 வாக்குகள் கிடைத்தன.

தங்க கணேசனைத் தொடர்ந்து கோபிக்கு 1,091 வாக்குகளும், சுஜித்திராவுக்கு 1,064 வாக்குகளும், அரிக்கு 1,064 வாக்குகளும், சதிஷிற்கு 1,041 வாக்குகளும், ஏராவிற்கு 1,034 வாக்குகளும், டாக்டர் முரளிக்கு 1,031 வாக்குகளும். கே. தினகரனுக்கு 1,031 வாக்குகளும், கணேஷிற்கு 1,028 வாக்குகளும் டத்தோ மோகன் R.S. மோகன் ஷானுக்கு 1,023 வாக்குகளும் கிடைத்தன.

இந்த பத்து பேர், வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இனி இந்து சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் இதர பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு மத்திய செயலவைக் கூட்டம் கூடியிருப்பதாக தங்க கணேசன் தெரிவித்தார்.