Jan 7, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலை நகரும் மின் படிக்கட்டு சர்ச்சை: நாளை மறுநாள் தேவஸ்தானம் அதிரடி விளக்கம்
ஆன்மிகம்

பத்துமலை நகரும் மின் படிக்கட்டு சர்ச்சை: நாளை மறுநாள் தேவஸ்தானம் அதிரடி விளக்கம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.06-

உலகப் புகழ் பெற்ற பத்துமலைத் திருத்தலத்தில் அமைக்கப்படவுள்ள நகரும் மின் படிக்கட்டான Escalator நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் நாளை மறுநாள் விளக்கம் அளிக்கவுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான சாதக பாதகங்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

வரும் ஜனவரி 8 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பத்துமலைத் திருத்தல வளாகத்தில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது, மின் படிக்கட்டு திட்டத்தின் தற்போதைய நிலை, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்களை தேவஸ்தானம் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்திச் சுற்றுலாத் தலமான பத்துமலையில் மேற்கொள்ளப்படும் இந்த நவீன மாற்றங்கள் குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதங்கள் மேலோங்கியுள்ள நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related News

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டம்: பக்தர்களின் வசதியா? தனிநபரின் ஆதாயமா? தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

பத்துமலை மின்படிக்கட்டுத் திட்டம்: பக்தர்களின் வசதியா? தனிநபரின் ஆதாயமா? தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தார் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு

பினாங்கு தைப்பூசத்திற்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிய வாய்ப்பு

பினாங்கு தைப்பூசத்திற்கு மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிய வாய்ப்பு

அர்ச்சகர் விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்து

அர்ச்சகர் விவகாரத்தை யாரும் சர்ச்சையாக்க வேண்டாம் மலேசிய இந்து அர்ச்சகர் சங்கம் வலியுறுத்து

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்துங்கள்-  அறிவுறுத்தினார் டத்தோ அ.சிவநேசன்

சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் ஆவணப்படுத்துங்கள்- அறிவுறுத்தினார் டத்தோ அ.சிவநேசன்

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

புக்கிட் கெமுனிங் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்னைக்குச் சுமூகமாகத் தீர்வு

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்