பெட்டாலிங் ஜெயா, ஜூலை.20-
மலேசிய இந்து சங்கத்தின் நீண்ட காலக் கனவான தாப்பா, ஜெகநாதர் ஆத்ம மையத்தில் இந்துக் கல்லூரி நிர்மாணிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இரண்டாவது முறையாக அந்தச் சங்கத்தின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

அதே போன்று தற்போது சங்கத்தின் முதலாவது உதவித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் முன் வைத்திருந்த ஓர் இந்து ஒரு ரிங்கிட் திட்டத்தையும் தாங்கள் அமல்படுத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவில் தோட்ட மாளிகையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 48 ஆவது ஆண்டுக் கூட்டம் மற்றும் தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்க கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

மலேசிய இந்து சங்கம் மேலும் சிறப்பாக செயல்படுவதற்குச் சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர்களுடன் இணைந்து கடுமையாகப் பாடுபடப் போவதாகவும் தங்க கணேசன் உறுதி கூறினார்.