Jan 17, 2026
Thisaigal NewsYouTube
வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா
ஆன்மிகம்

வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா

Share:

சிரம்பான், ஜூன்.19-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜாஃபாரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர உற்சவப் பெருவிழா வரும் ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

இதனையொட்டி வரும் ஜுன் 27ஆம் தேதி தொடங்கி ஜுலை 9 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகளுடன் வருடாந்திர உற்சவப் பெருவிழா களைகட்டவிருக்கிறது.

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோவில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீ மத் சிவாக்கர தேசிய சுவாமிகளின் தலைமையில் உற்சவ பூஜைகள், அவரின் ஆலோசனையின்படி நடைபெறவுள்ளது.

வரும் ஜுன் 26 ஆம் தேதி வியாழக்கிழமை முகூர்த்தக் கால், கணபதி ஹோமம், ஜுன் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றம், ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரத ஊர்வலம் மற்றும் ஜுலை 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியிறக்கம் என வருடாந்திர உற்சவம், நான்கு சிறப்பு அம்சங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

13 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் உற்சவப் பெருவிழாவிலும் பக்தப் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு, ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரரின் அருளாசி பெறுமாறு தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு