Oct 28, 2025
Thisaigal NewsYouTube
அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத பூஜை
ஆன்மிகம்

அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத பூஜை

Share:

அலோர் காஜா, அக்டோபர்.27-

மலாக்கா, அலோர் காஜா, ஜாலான் சிம்பாங் அம்பாட், கம்போங் கெமுஸ், பழைய நானிங் திருக்கோவிலான திருவருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கந்த சஷ்டி விரத விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம், நாளை அக்டோபர் 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இரவு மணி 7.28 க்கு தொடங்கி 8.33 வரை திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலய திருமண மண்டபத்தில் நடைபெறும்.

இத்திருக்கல்யாண வைபவத்தில் அடியார் பெருமக்கள் திரளாக, தம்பதிகளாகக், கலந்து கொண்டு இல்லத்தில் உள்ள ஆண், பெண் இரு பாலர்களுக்கும் கல்யாண வரன் ஏற்படவும், குடும்பம் விருத்தியடையவும், மாங்கல்ய பலம் பெறவும், தொழில், வியாபாரம், அஷ்ட ஐஸ்வரிய, நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம் பெறவும் எல்லா வல்ல இறைவனின் அருளாசி பெறுமாறு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலய நிர்வாகச் சபை மற்றும் உபயக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக நேற்று அக்டேபார் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு இரவு 7.00 மணிக்கு நித்திய பூஜை, வசந்த மண்டப பூஜை, கந்தத ஷஸ்டி பாராயணம், தீபாராதனை வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

பூஜைகள் யாவும் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களின் ஆலோசனையின்படி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News