திருக்கயிலைத் திருத்தலப் பயணம் ஆன்மீக யாத்திரைகளில் முதன்மையானது. பங்கேற்பாளர்களின் மனதையும், வாழ்க்கை நோக்கையும், உள்ளார்ந்த அமைதியையும் காண வழிகாட்டும் ஓர் அபூர்வ அனுபவமாகும்.
எதிர்வரும் ஆகஸ்ட் 9 முதல் 21 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் திருக்கயிலைத் திருத்தலப் பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
திருக்கயிலாயப் பரம்பரை பேரூர் ஆதீனத்தின் தலைமையில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் இந்தத் திருத்தலப் பயணத்தை வழிநடத்த உள்ளார்கள்.
பூவுலக கயிலையாகப் போற்றப்படும் கயிலை மலையானை நேரில் தரிசிக்கும் அரிய வாய்ப்பு.
பக்தி சார்ந்ததோடு மட்டுமல்ல, இது ஓர் ஆன்மீக சிந்தனைப் பயணம் கூட.
தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, ஆழ்ந்த அமைதி, அனுபவத்தைத் தரும் ஆன்மீக விழிப்புணர்வு பயணம்.
தவத்திரு அடிகளாரின் வழிகாட்டுதல், சமய சிந்தனைகள், கூட்டு வழிபாடு, திருமுறை பாராயணம் மற்றும் ஆன்மீக உரைகள், உள்ளத்தைத் தெளிவாக்கும்.
வாழ்க்கையில் ஒரு முறையே இத்தகைய அரிய வாய்ப்பு.
கயிலைமலையின் புனிதமான சூழல், வழிபாட்டு அனுபவங்கள், புதிய நண்பர்கள் அறிமுகம் நினைவில் நிற்கும் தருணங்களாகும்.
இன்னும் குறைந்த இடங்களே உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்பை உறுதி செய்ய முன் பதிவு அவசியமாகும்.