Jan 17, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவின் திருக்கல்யாண நிகழ்வு
ஆன்மிகம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவின் திருக்கல்யாண நிகழ்வு

Share:

சிரம்பான், ஜூலை.09-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்வு, நேற்று முன்தினம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை ஶ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் தலைமையில் அவரின் ஆலோசனைபடி இத்திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

சொக்கநாதருக்கும், மீனாட்சிக்கும் இடையிலான இத்திருக்கல்யாண நிகழ்வில் அதிகமான அடிகளார்கள் கலந்து கொண்டு, சுவாமிகளின் திருமணக் கோல அருள்காட்சியைக் கண்டு, தரிசனம் செய்தனர்.

முன்னதாக, உற்சவர் ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்விற்கு அனைத்து சீர்வரிசை தட்டுகளும் வைக்கப்பட்டன. பின்னர் மேளதாளம், நாதஸ்வரம் முழங்க மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. தொடர்ச்சியாக சொக்கநாதருக்கும், மீனாட்சிக்கும் கங்கணம் கட்டும் நிகழ்வும், மாலை மாற்றும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிச்சாண்டீஸ்வரர் வழிபாடும், கொடியிறக்க நிகழ்வும் விமர்சியாக நடைபெற்றது. திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய பெருமானுக்கு ஆகம விதிப்படி எப்படியெல்லாம் அங்கு பூஜைகள் நடைபெறுகிதோ, அது போலவே ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்திலும் வழிபாடுள் நடைபெறுகின்றன.

எங்கும் இல்லாத சத்ரு சம்ஹார கால பைரவர் பெருமானும், மூலஸ்தானத்தில் அண்ணாமலையார் போன்று பெருமானும், அது போலவே அம்பிகை பராசக்தி அம்பாள் தனது கையில் சிவலிங்கத்தை வைத்து தவக்கோலத்தில் இருக்கின்ற காட்சியையும் இங்கு காண முடியும் என்று ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் குறிப்பிட்டார்.

இந்த பத்து நாள் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு பெரும் ஆதரவும், ஒத்துழைப்பும் நல்கிய அடிகளார்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சுவாமிகள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பக்தி பரவசமூட்டும் பரநாட்டியங்களுடன் தேவஸ்தானத்தின் மஹோற்சவப் பெருவிழா, சண்டிகேஸ்வரர் சிறப்பு பூஜையுடன் இன்று நிறைவு பெற்றது.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு