Dec 1, 2025
Thisaigal NewsYouTube
அன்பு  கரங்கள் அமைப்பின்  நன்னெறி  பண்புகளை பறைசாற்றும் பட்டறை
ஆன்மிகம்

அன்பு  கரங்கள் அமைப்பின்  நன்னெறி  பண்புகளை பறைசாற்றும் பட்டறை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27-

அண்மையில் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் சிலாங்கூர் ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் என்ற ஆன்மிக அமைப்பு பெற்றோர் . மாணவர்களுக்கான சமய நன்னெறி பண்புகளை ஊக்குவிக்கும் பட்டறை ஒன்றினை அமோகமாக நடத்தியது.

கடந்த சனிக்கிழமையன்று காலை 7 மணி முதல் மாலை 5 வரை நடத்தப்பட்ட நிகழ்ச்சி இது . ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் தலைவர்

மருதையா பட்டறையின் முக்கியத்துவம் குறித்து இந்நிகழ்ச்சியின் போது எடுத்துரைத்தார். பட்டறை என்பது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மத்தியில் நேர்முக தொடர்பிணை ஏற்படுத்தி தருகிறது. அதோடு இந்த இரண்டு தரப்பினர்களிடையே ஆன்மீக உணர்வு தழைத்தோங்குவதற்கு இப்பட்டறை பறை சாற்றுவதாகவும் கட்டியம் கூறுவதாகவும் இருக்கும் என்றும் சங்கத் தலைவர் மருதையா தெளிவுப் படுத்தினார்

இறையுணர்வு என்பது எல்லாரையும் சரியான திசையில் கொண்டுச் செல்லும் . போகும் பாதை பொல்லாத பாதையாக இல்லாமல் பொருத்தமான பாதையாக இருக்கும் . தேசிய கீதம் , சிலாங்கூர் மாநில கீதம் , சம்பா நடனம் , அரங்கேற்றம் கண்டது . ஆனந்த கிருஷ்ணன் தேவாரம் பாடினார் .

திருமுறைச் செம்மல் ந.தர்மலிங்கம் ஆன்மீக கருத்துகளை எடுத்துரைத்தார். பிரமுகர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது . டாக்டர் புனிதன் ஷான் சிறப்புரையாற்றினார் பிரமுகர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டன. ஆன்மீக உரையாற்றினார் ஆனந்த கிருஷ்ணன். மலேசிய ஆதிசங்கர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்தரா சமயமும் குழந்தை வளர்ப்பும் என்று

பெற்றோருக்கான உரையில் பல்வேறு பயனான கருத்துகளை எடுத்துரைத்தார் . இந்நிகழ்ச்சியில் பிரதமரின் அரசியல் செயலாளரின் சிறப்பு அதிகாரியான ஜொனர்த்தன் டத்தொ ஶ்ரீ ஹரி , பெம்புபிரியாணி பாபு, ம இ கா செலாயாங் கிளை சரவணன் .மஇக தொகுதித் தலைவர் கோபி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி