Dec 1, 2025
Thisaigal NewsYouTube
மாசாயில் ஆஷாட நவராத்திரி திருவிழா
ஆன்மிகம்

மாசாயில் ஆஷாட நவராத்திரி திருவிழா

Share:

ஜோகூர், ஜூலை 15-

ஜோகூர், மசாய், ஜாலான் மசாய் லாமா-வில் வீற்றிருக்கும் சிவ கோட்டை ஸ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஸ்ரீ மகா சாமுண்டீஸ்வரர் அம்மன் கோவிலின் 10 ஆடி உயரம் கொண்ட முதல் சுதைவடிவமான ஸ்ரீ வாராஹி தேவி ஆஷாட நவராத்திரி திருவிழா, கடந்த ஜுலை 15 ஆம் தேதி திங்கட்கிழமை மிக கோலாகலமாக நடைபெற்றது.

அடியார்களின் குறைகளைத் தீர்க்கும் ஜெகன் நாயகியாம் அன்னை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற வருடாந்திர ஆஷாட நவராத்திரி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்பிகையின் திருவருளைப் பெற்றனர்.

பக்தி பரவசமிக்க கரகாட்டத்துடன் மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்த வருடாந்திர திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் ஏந்தி, ஊர்வலமாக வந்து, பின்னர் அன்னை ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.

சக்தி வாய்ந்த தேவதையாக போற்றப்படும் அன்னை ஸ்ரீ வராஹி தேவி ஆஷாட நவராத்திரி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு நன்கொடை அளித்தவர்களுக்கும், உபயம் எடுத்தவர்களுக்கு ஆலயத்தின் குருக்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்ளப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஆலயத்தில் சிவசங்கர, சிவசங்கரி அஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையொட்டி ஒவ்வொரு ஆடி வெள்ளியும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ந டைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துக்கொண்டனர்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி