Dec 1, 2025
Thisaigal NewsYouTube
ஆன்மிகம்

தைப்பூச விழாவிற்கு நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும்: பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்தார் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா

Share:

பத்துமலை, பிப்.11-

தைப்பூச விழாவிற்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

தைப்பூச விழா ஒரு சமய விழாவாக இருந்தாலும் மலேசியாவின் பன்முக கலாச்சார அம்சங்களின் அடிப்படையில் இது ஒரு பெருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுவதால் இதற்கு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பத்துமலைத்திருத்தலத்திற்கு வருகை புரிந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரிடம், தேவஸ்தானம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாக, தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கக் கோரி, வலியுறுத்தப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, இன்று பத்துமலைத்திருத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் டான்ஸ்ரீ நடராஜா இதனை தெரிவித்தார்.

தேவஸ்தானத்தின் கோரிக்கைக்கு பிரதமர், உரிய பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கையை எடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

அதேவேளையில் பிரதமரின் பத்துமலை வருகைக்கு பின்னர் அரசாங்கத்திடமிருந்து தேவஸ்தானத்திற்கு 10 லட்சம் ரிங்கிட் மானியம் கிடைத்து இருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா அறிவித்தார்.

இவ்வேளையில் பிரதமருக்கு தேவஸ்தானம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் பத்துமலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும் என்று டான்ஸ்ரீ நடராஜா நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

வெகு விமரிசையாக  நடைபெற்றது பினாங்கு  அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

வெகு விமரிசையாக நடைபெற்றது பினாங்கு அருள்மிகு காமாட்சி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

குளுவாங்கில் சமய மாநாடு: மூன்று சமய ஆன்றோர்கள் கெளரவிப்பு

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

கோலாகலமாக நடைபெற்றது பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தான ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

‘பதிகமே பரிகாரம் ' சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி

பினாங்கு, ஸ்ரீ கணேசர் ஆலய கும்பாபிஷேகத் திருப்பணிக்கு துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் ஒரு லட்சம் ரிங்கிட் நிதி உதவி