Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து
ஆன்மிகம்

இந்து சமய அறிவைப் பெருக்கிக் கொள்ள ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்து

Share:

குளுவாங், நவம்பர்.29-

இந்து மதத்தில் தொட்ட இடமெல்லாம் நல்மணிகள். இறைவனின் இயக்கத்தைப் பற்றிய விரிவான சமய அறிவை நமது இளைய தலைமுறையினர் பெறுவதற்கு ஒவ்வோர் ஆலயமும் சமய மாநாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

சம்பிராணி புகையில் கூட தெய்வீகச் சக்தியைக் கண்டவர்கள் இந்துக்கள். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைக் காக்கவும், நோய்த் தொற்றைத் தடுக்கவும், மரத்தில் இருந்து உற்பத்தியாகின்ற சாம்பிராணியும், அதன் புகையும் தெய்வீகச் சக்தியாகப் பயன்படுத்தினார்கள்.

இது போன்ற சமயம் சார்ந்த ஆழமான விஷயங்களை நமது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே போதிக்கப்பட வேண்டும். அதற்கு ஒவ்வோர் ஆலயமும் சமயம் சார்ந்த மாநாட்டை நடத்த வேண்டும். பக்தி மார்க்கத்தில் ஏற்படும் நிம்மதியே நமது வாழ்வியலின் அடித்தளம் என்று என்று தப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

ஜோகூர், குளுவாங், தாமான் பெர்சத்து, ஜாலான் பத்து பஹாட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கணேசன் சுப்பையா முன்னிலையில் இரு தினங்களுக்கு நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாபெரும் சமய மாநாட்டை குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக, வரவேற்புரையாற்றிய வேல் முருகன் ஆலயத்தின் தலைவர் கணேசன் சுப்பையா, சமய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த டத்தோ ஶ்ரீ எம். சரவணனுக்கு பொன்னாடைப் போர்த்தி, மாலை அணிவித்து, நினைவுப் பரிசை வழங்கி சிறப்பு செய்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக இந்தியர்களின் பாரம்பரிய ஆடையில் கலந்து கொண்ட குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் Wong Shu Qi- க்கும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் பொன்னாடைப் போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

மாநாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு, திருநணா பவாணி சிவ. அய்யாவு தியாகராஜன், பேராசிரியர் சொ. சொ. மீ. சுந்தரம், சிவஸ்ரீ அ.ப. முத்துகுமார சிவச்சாரியார் உட்பட முக்கிய சமய அறிஞர்களும், ஆன்றோர்களும், திரளான பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Related News

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

பத்துமலைத் திருத்தலத்தில் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 50 ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படும்- பாப்பாராய்டு தகவல்

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

கோவை பேரூர் ஆதீனத்தில் மாபெரும் திருவாசக முற்றோதல் பெருவிழா

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

சிப்பாங் சிலாங்கூர் ட்ரெட்ஜிங், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நில விவகாரம்: மாற்று நிலம் வழங்கினால் இடம் மாறத் தயார் என மக்கள் கோரிக்கை

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பத்துமலை நகரும் மின்படிக்கட்டான எஸ்கலேட்டர் திட்டத்திற்கான விண்ணப்பம் 'தனிநபர்' பெயரில் சமர்ப்பிக்கப்பட்டதா? குற்றச்சாட்டை வன்மையாக மறுத்தார் டான் ஶ்ரீ நடராஜா

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் - மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு