Oct 16, 2025
Thisaigal NewsYouTube
பத்துமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்
ஆன்மிகம்

பத்துமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பத்துமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முறையே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் இந்த மகா சண்டி ஹோமம் நடைபெறவிருப்பதாக கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ மகா துர்க்கை அம்மன் கோயிலில் ஓராண்டு நிறைவையொட்டி பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய இந்த மகா சண்டி ஹோமம் நடத்தப்படவிருப்பதாக பத்துமலைத் திருத்தலத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான் ஶ்ரீ நடராஜா இதனைத் தெரிவித்தார்.

காணக் கிடைக்காத இச்சண்டி ஹோமத்தைக் காண பக்தப் பெருமக்களும், பொதுமக்களுக்கும் திரளாக வருகை தந்து ஹோம பூசைகளில் பங்கு பெற்று அன்னை ஸ்ரீ மகா துர்க்கை அம்மனின் அருளைப் பெற வேண்டுவதாக டான் ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சண்டி ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் யாகப் பொருட்களைத் தாங்களே யாக குண்டத்தில் இட்டு, பிரார்த்தனைச் செய்வதற்குரிய வசதியையும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.

Related News

பத்துமலை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் | Thisaigal News