கோலாலம்பூர், ஆகஸ்ட் 05-
நாட்டின் தாய்க்கோயிலான கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் ஆடிப்புரத் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழா 10 ஆம் ஆம் நாள் உற்சவம், நாளை மறுநாள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவிருக்கிறது.
அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கோட்டுமலை கணேசர் கோவிலிருந்து பூத்தட்டுகள் ஏந்தி ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலை நோக்கி புறப்படுதல் நிகழ்வு நடைபெறும் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா விவரித்தார்.
இவ்விழாவில் பக்த பெருமக்கள் திரளாக வருகை தந்து, அன்னை ஸ்ரீ மகாமாரியம்மனின் திருவருளை பெற்று, பேரின்ப பெருவாழ்வு பெற்றுய்யுறுமாறு டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் நடராஜா கேட்டுக்கொள்கிறார்.
டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா,
தலைவர், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம்.








