Oct 1, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்களின் கால்பந்து திறமையை அடையாளம் காண போட்டி – ஸ்டான்லி நெல்சன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்களின் கால்பந்து திறமையை அடையாளம் காண போட்டி – ஸ்டான்லி நெல்சன்

ஈப்போவில் மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் மற்றும் திறமையை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணும் நோக்கில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளரும் பேரா மாநில பெர்சாத்துவான் கெபாஜிகான் செஹாத்தி வர்கா பேராக் சங்கத்தின் செயலாளருமான ஸ்டான்லி நெல்சன் தெரிவித்தார்.

இப்போட்டி இளம் கால்பந்து வீரர்களைத் தேடும் களமாக மட்டுமின்றி, மாணவர்களிடையே சிறுவயதிலிருந்தே ஒழுக்கம், குழு ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டு உணர்வை வளர்க்கும் தளமாகவும் அமைகிறது என்றார்.

ஆரம்ப நிலையிலேயே திறமைகளை அடையாளம் காண்பதன் மூலம், மாணவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவளித்த தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் மூத்த சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார், துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பாளசாமி, நவீரா மெடிடேக் (NAVIRA MEDITECH) நிறுவன இயக்குநர் எஸ். ராஜசேகரன் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஸ்டான்லி நெல்சன் நன்றி தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறமையை வளர்த்துக் கொண்டு, குறிப்பாக கால்பந்து துறையில் எதிர்கால வாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →
மாணவர்களின் கால்பந்து திறமையை அடையாளம் காண போட்டி – ஸ்டான... | Thisaigal News