Aug 3, 2026
Thisaigal NewsYouTube
தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி
விளையாட்டு

தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி

Share:

மலேசியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான பியர்லி தன் - எம். தினா ஜோடி, தைவான் பொது தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனைகளிடம் போராடித் தோல்வியடைந்துள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஜப்பானின் இளம் ஜோடியான சுமீரே நாகடே - மியு தகாஹாஷி ஜோடியை எதிர்கொண்ட மலேசிய ஜோடி, 16-21, 18-21 என்ற நேர் செட்களில் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இருப்பினும், இப்போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது தங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகப் பியர்லி தன் தெரிவித்துள்ளார். காயம் மற்றும் ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வந்து, இந்த ஆண்டில் தங்களின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இந்தத் தைவான் பொதுத் தொடர் நல்வாய்ப்பாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை இந்தியாவின் புது டில்லியில் நடைபெறவிருக்கும் மிகவும் மதிப்புமிக்க பி.டபிள்யூ.எப். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தங்களை முழுமையாகத் தயார்படுத்தி வருவதாகவும், அதில் சிறந்த திறனை வெளிப்படுத்த உறுதியாக இருப்பதாகவும் பியர்லி தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News