Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் - ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார் மலேசியாவின் தங்கமங்கை சிவசங்கரி
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் - ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார் மலேசியாவின் தங்கமங்கை சிவசங்கரி

Share:

அஸிஸி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் எஸ். சிவசங்கரி மீண்டும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் அனாஹாட் சிங்கை வீழ்த்தியதன் மூலம், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியையும் பெற்றுள்ளார்.

கெடா மாநிலத்தில் பிறந்தவரான எஸ். சிவசங்கரி, இந்த வெற்றி தனது ஒலிம்பிக் கனவை நனவாக்குவதற்கான முக்கியமான படி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அவர், தொழில்முறை ஸ்குவாஷ் சங்க சுற்றுப்பயணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்தப் பருவத்தின் முடிவில் உலகின் முதல் 3 வீராங்கனைகளுக்குள் முன்னேற இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கடந்த 2022-ஆம் ஆண்டு ஹாங்ஸாவ் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற தங்கத்தைத் தக்கவைத்த எஸ். சிவசங்கரி, எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும், 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகார்த்தா-பலேம்பாங் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகமாகி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அவர், இம்முறை முதல் நிலை வீராங்கனையாக களமிறங்கியதால் கூடுதல் அழுத்தம் இருந்தபோதும், உணர்வுகளை கட்டுப்படுத்தி போட்டியில் கவனம் செலுத்தியதாக விவரித்துள்ளார்.

Related News