Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!

Share:

இந்தியா, ஜூலை 01-

இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட், தனது 71 வயதில் காலமாகியுள்ளார்.

இரத்தப் புற்றுநோயுடன் நீண்டகாலமாக போராடிய இவர் கடந்த மாதம்வரை லண்டனில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (31) காலமானார்.

கெய்க்வாட் 1975ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டுவரை இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்.

பின்னர் தேர்வாளராகவும் தேசிய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தம்மை குறிப்பிடத்தக்கது.

Related News