Jul 15, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து இடமாற்றம்: பிஎஸ்ஜி அணியின் லீ காங்-இன்னை 4 கோடி யூரோ ஒப்பந்தத்தில் வாங்குகிறது அட்லெடிகோ மாட்ரிட்
விளையாட்டு

கால்பந்து இடமாற்றம்: பிஎஸ்ஜி அணியின் லீ காங்-இன்னை 4 கோடி யூரோ ஒப்பந்தத்தில் வாங்குகிறது அட்லெடிகோ மாட்ரிட்

Share:

பிரான்சின் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர முன்கள வீரரான லீ காங்-இன், சுமார் 4 கோடி யூரோ 40 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் அணியில் இணையவுள்ளார். தென் கொரியாவைச் சேர்ந்த 25 வயதான இந்த அதிரடி ஆட்டக்காரர், கடந்த 2023-ஆம் ஆண்டு மல்லோர்கா கிளப்பில் இருந்து பிஎஸ்ஜி அணியில் சேர்ந்தார். அங்கு விளையாடிய காலத்தில் அவர் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், மூன்று முறை லிகு 1 பட்டங்களையும் வெல்ல அந்த அணிக்கு உதவியுள்ளார்.

தற்போது பிஎஸ்ஜி அணியுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் மீதமுள்ள நிலையில், இரு கிளப்புகளுக்கும் இடையேயான இந்த புதிய இடமாற்ற ஒப்பந்தத்தின் இறுதி கட்ட சிறு விவரங்கள் மட்டுமே இன்னும் முடிவடைய வேண்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிஎஸ்ஜி அணிக்காக 124 போட்டிகளில் விளையாடி 16 கோல்களை அடித்துள்ள லீ காங்-இன், சமீபகாலமாக பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் நிருவாகத்தின்கீழ் விளையாடுவதற்கான போதிய வாய்ப்புகள் கிடைக்காமலும், கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட தொடைப் பகுதி காயம் காரணமாகவும் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்தார். லீ காங்-இன் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு மாறுவது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மொனாக்கோ அணியின் மேக்னஸ் அக்லியோச் மற்றும் ஆர்பி லீப்ஜிக் அணியின் யான் தியோமண்டே ஆகியோரைத் தங்கள் அணியில் சேர்க்க பிஎஸ்ஜி நிருவாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related News

உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: "எவரையும் வீழ்த்த முடியும்" - சொந்த மண்ணில் பதக்கம் வெல்ல பி.வி. சிந்து அதீத நம்பிக்கை!

உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: "எவரையும் வீழ்த்த முடியும்" - சொந்த மண்ணில் பதக்கம் வெல்ல பி.வி. சிந்து அதீத நம்பிக்கை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பல ஆண்டு கனவை நனவாக்கிய 50 மற்றும் 40 வயது மூத்த வீரர்கள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பல ஆண்டு கனவை நனவாக்கிய 50 மற்றும் 40 வயது மூத்த வீரர்கள்

அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: இங்கிலாந்து அணிக்கு டெக்லான் ரைஸ் வருகை கூடுதல் பலம்

அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: இங்கிலாந்து அணிக்கு டெக்லான் ரைஸ் வருகை கூடுதல் பலம்

மாபெரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி: ஸ்பெயினில் வெடித்தது நள்ளிரவு கொண்டாட்டம்!

மாபெரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி: ஸ்பெயினில் வெடித்தது நள்ளிரவு கொண்டாட்டம்!

உலகக் கோப்பை அரையிறுதி: நடுவர் மீது பாய்ந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ்; ஸ்பெயின் அபார வெற்றி!

உலகக் கோப்பை அரையிறுதி: நடுவர் மீது பாய்ந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ்; ஸ்பெயின் அபார வெற்றி!

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர் பேர்லி - திணா

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர் பேர்லி - திணா