Apr 19, 2026
Thisaigal NewsYouTube
முடிவுக்கு வந்தது டேவிட் வார்னரின் கிரிக்கெட் சகாப்தம்; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு.
விளையாட்டு

முடிவுக்கு வந்தது டேவிட் வார்னரின் கிரிக்கெட் சகாப்தம்; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு.

Share:

இந்தியா, ஜூன் 25-

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி மற்றும் ஆப்கானிஸ்தானின் வெற்றியைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா பரிதாபமாக வெளியேறியது. ஆஸ்திரேலியா வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இடம் பெற்று விளையாடிய வார்னர் அதோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டி தான் வார்னர் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி. இதே போன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் கடைசியாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டி தான் வார்னரது கடைசி டி20 போட்டி. இந்தப் போட்டியில் அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலி உடன் உரையாடலில் ஈடுபட்டார். ஹர்திக் பாண்டியாவுடன் பேசினார். இந்த நிலையில் வார்னர் வெளியேறிய பிறகு பேசிய ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் கூறியிருப்பதாவது: டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இப்போது டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

Related News

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்: 10 வீரர்களுடன் விளையாடிய அல்-அஹ்லியிடம் போராடித் தோற்றது ஜேடிடி!

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்: 10 வீரர்களுடன் விளையாடிய அல்-அஹ்லியிடம் போராடித் தோற்றது ஜேடிடி!

பிராங்க் லம்பார்ட் தலைமையிலான கோவென்ட்ரி சிட்டி அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

பிராங்க் லம்பார்ட் தலைமையிலான கோவென்ட்ரி சிட்டி அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய கிரிஸ்டல் பேலஸ்: ஷக்தார் டொனெட்ஸ்க் அணியுடன் மோதல் உறுதி!

தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய கிரிஸ்டல் பேலஸ்: ஷக்தார் டொனெட்ஸ்க் அணியுடன் மோதல் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி