Nov 26, 2026
Thisaigal NewsYouTube

பெண்கள் தேசிய மின்னணு விளையாட்டு அணி மீண்டும் களமிறங்குகிறது! அடுத்த ஆண்டு 12 வீராங்கனைகள் பங்கேற்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண்கள் தேசிய மின்னணு விளையாட்டு அணி மீண்டும் களமிறங்குகிறது! அடுத்த ஆண்டு 12 வீராங்கனைகள் பங்கேற்பு

மலேசியப் பெண்கள் தேசிய மின்னணு விளையாட்டு அணியை அடுத்த ஆண்டு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர தேசிய விளையாட்டு மன்றம் திட்டமிட்டுள்ளது. இதில் 12 வீராங்கனைகள் இரண்டு பிரபலமான மின்னணு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி இதனை மக்களவையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது தெரிவித்தார்.

குறிப்பாக, மோபைல் லெஜன்ஸ்: பாங் பாங் மற்றும் ஹானர் ஓஃப் கிங்ஸ் ஆகிய ஐந்து பேர் கொண்ட அணிகள் மோதும் விளையாட்டுகளில் வீராங்கனைகள் பயிற்சி பெற்று போட்டியிடவுள்ளனர்.

மின்னணு விளையாட்டுத்துறை தற்போது வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, வளர்ந்து வரும் தொழில்துறையாகவும் உருவெடுத்துள்ளதால், மலேசிய மின்னணு விளையாட்டுச் சம்மேளனத்துடன் இணைந்து இதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சு தயாரித்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், இத்துறையை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்துவதற்காக தேசிய அளவிலான பயிற்சி மையம், சிலாங்கூர் புச்சோங்கில் உள்ள மின்னணு விளையாட்டு மையம் மற்றும் 13 மாநில அளவிலான பயிற்சிக் கூடங்கள் பயன்படுத்தப்படும் என்றும் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →