May 25, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவுக்கு எதிரான டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக ரோமேன் பவெல் நியமனம்
விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டனாக ரோமேன் பவெல் நியமனம்

Share:

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் முடிந்ததும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தரோபாவில் நாளை நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் 20 ஓவர் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். இதே போல் ஒரு நாள் தொடரில் ஆடாத நிகோலஸ் பூரன் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார்.

'அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை மனதில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக அணிக்கு சரியான வீரர்கள் சேர்க்கையை கண்டறிய நாங்கள் பல்வேறு திட்டங்களை பார்க்கிறோம்' என்று வெஸ்ட்இண்டீஸ் அணியின் தேர்வு குழு தலைவர் தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் போட்டி அணி வருமாறு:- ரோமன் பவெல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், ஒபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரொமாரியா ஷெப்பர்டு, ஒடியன் சுமித், ஒஷானே தாமஸ்.

Related News

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை