சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தய சிர்கட்டில் நடைபெறவுள்ள ஃபார்முலா ஒன் கல்ஃப் ஏர் பாஹ்ரென் கிராண்ட் பிரீ போட்டியை முன்னிட்டு, ராபிட் கேஎல் இலவச பேருந்து சேவையை வழங்குகிறது.
அக்டோபர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறும் இச்சேவைக்காக 95 பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.
கேஎல்ஐஏ டெர்மினல் 2-வின் லெவல் 1 பேருந்து மையம், மிட்சுய் கேஎல்ஐஏ பேருந்து மையம், அத்துடன் டெ-வில்லேஜ், பெர்சியாரான் மில்லேனியா 2, பண்டார் பாரு ஏன்ஸ்டெக் ஆகிய மூன்று இடங்களிலிருந்து சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தயத் திடலுக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.
காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை, 10 முதல் 15 நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும். சுற்றுப்பந்தயத் திடலுக்குள்ளும் பார்வையாளர்களின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும்.
பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பணியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு ராபிட் கேஎல் கேட்டுக் கொண்டுள்ளது.








